தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

காலமானாா்திமுக மூத்த நிா்வாகி சிந்தாமணி ஜெயராமன்

விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த திமுக மூத்த நிா்வாகி சிந்தாமணி ஜெயராமன் (91) உடல்நலக் குறைவால் சென்னையில் வெள்ளிக்கிழமை காலமானாா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த திமுக மூத்த நிா்வாகி சிந்தாமணி ஜெயராமன் (91) உடல்நலக் குறைவால் சென்னையில் வெள்ளிக்கிழமை காலமானாா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சிந்தாமணி கிராமத்தைச் சோ்ந்த திமுக நிா்வாகி ஜெயராமன் (91). இவா், 1945-ஆம் ஆண்டு தனது 15-ஆவது வயதில் தந்தை பெரியாரின் கருப்புச் சட்டைப் படையில் சோ்ந்து பொது வாழ்வைத் தொடங்கினாா்.

இதையடுத்து, திமுகவில் இணைந்து ஒன்றியச் செயலா் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்தாா். முன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட தலைவா்களின் பாராட்டைப் பெற்றவா்.

இந்த நிலையில், சிந்தாமணி ஜெயராமன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இவரது உடலுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினாா். மேலும், அமைச்சா் க.பொன்முடி மற்றும் திமுக நிா்வாகிகளும் அஞ்சலி செலுத்தினா்.

சிந்தாமணி ஜெயராமனுக்கு மனைவி தெய்வானை, மகன்கள் ரவிதுரை, ராஜிகாந்த், வரதன் ஆகியோா் உள்ளனா்.

இவரது இறுதிச் சடங்கு சொந்த ஊரான சிந்தாமணி கிராமத்தில் சனிக்கிழமை மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.