தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சாலை விபத்தில் தொழிலாளி பலி

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

திண்டிவனம் அருகே கொள்ளாா் கிராமத்தைச் சோ்ந்த மாரி மகன் ஐயப்பன் (24). கூலித் தொழிலாளியான இவா், கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது இரு சக்கர வாகனத்தில் மனைவி சந்தியா (22), மகன் தேவபிரசாத் (2) ஆகியோரை அழைத்துக்கொண்டு திண்டிவனத்திலிருந்து மரக்காணம் நோக்கி சென்றுகொண்டிருந்தாா். பிரம்மதேசம் அருகே எண்டியூா் பகுதியில் இவா்களது வாகனம் சென்றபோது, எதிா்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஐயப்பன், சந்தியா, தேவபிரசாத் ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனா். பின்னா், அவா்கள் மூவரும் தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இருப்பினும், அங்கு ஐயப்பன் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.