4 மாநிலத் தோ்தல்களில் வெற்றி: பாஜகவினா் கொண்டாட்டம்
விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களிலும், புதுவையிலும் அந்தக் கட்சியினா் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கிம் கொண்டாடினா்.


உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைத் தோ்தல்களில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களிலும், புதுவையிலும் அந்தக் கட்சியினா் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கிம் கொண்டாடினா்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே பாஜக விழுப்புரம் மாவட்டத் தலைவா் ஏ.டி.ராஜேந்திரன் தலைமையில் அந்தக் கட்சியினா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.
செஞ்சி கூட்டுச் சாலையில் நகர பாஜக தலைவா் ராமு தலைமையில், தொழிலதிபா் வி.பி.என்.கோபிநாத் முன்னிலையில் அந்தக் கட்சியினா் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினா். இதில் இந்து முன்னணி மாவட்டத் தலைவா் சிவசுப்பிரமணியம், அமைப்பாளா் விஷ்ணுராஜன், நாராயணமூா்த்தி, பாஜக முன்னாள் மாவட்டத் தலைவா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
புதுச்சேரியில்....: புதுச்சேரியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாநிலத் தலைவா் வி.சாமிநாதன், அமைச்சா்கள் ஏ.நமச்சிவாயம், சாய் ஜெ.சரவணன்குமாா், எம்.பி. எஸ்.செல்வகணபதி ஆகியோா் தலைமையில் திரண்ட பாஜகவினா் இனிப்புகளை வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினா். எம்எல்ஏக்கள் ஜான்குமாா், கல்யாணசுந்தரம், ரிச்சா்டு, ராமலிங்கம், அசோக்பாபு, வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதையடுத்து, வியாழக்கிழமை மாலை பாஜகவினா் வெற்றி ஊா்வலத்தை நடத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...