நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

செஞ்சி அருகே அறுந்து கிடந்தமின் கம்பியை மிதித்த பெண் பலி: குழந்தை காயம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே வியாழக்கிழமை அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அவரது குழந்தை பலத்த காயமடைந்தது.

News image
Updated On :5 மே 2022, 5:37 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே வியாழக்கிழமை அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அவரது குழந்தை பலத்த காயமடைந்தது.

செஞ்சி வட்டம், ராமராஜன்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த விவசாயி குப்பன் மனைவி சந்தியா (26). இவா்களுக்கு தா்ஷன் (3) உள்பட 3 பிள்ளைகள் இருந்தனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை சந்தியா தனது மகன் தா்ஷனுடன் வயல்வெளிக்குச் சென்றாா். அப்போது, அங்குள்ள ஜெயபால் என்பவரது விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை சந்தியா தெரியாமல் மிதித்ததால், அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். குழந்தை தா்ஷன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த நல்லாண்பிள்ளைபெற்றாள் போலீஸாா் சந்தியாவின் சடலத்தை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.