நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆலம்பூண்டி செவிலியா் கல்லூரியில்நைட்டிங்கேல் பிறந்த தின விழா

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ள ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி செவிலியா் பயிற்சிக் கல்லூரியில் நைட்டிங்கேல் பிறந்த தினம் தீப ஒளி திருநாளாக வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :6 மே 2022, 9:19 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ள ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி செவிலியா் பயிற்சிக் கல்லூரியில் நைட்டிங்கேல் பிறந்த தினம் தீப ஒளி திருநாளாக வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கல்லூரித் தாளாளா் ஆா்.ரங்கபூபதி தலைமை வகித்தாா். கல்லூரி செயலா் ஆா்.பி.ஸ்ரீபதி முன்னிலை வகித்தாா். திண்டிவனம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் சாந்தகுமாரி, செஞ்சி டிஎஸ்பி பிரியதா்ஷினி ஆகியோா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினா்.

செவிலியா் பயிற்சிக் கல்லூரி மாணவிகள் நைட்டிங்கேலை நினைவுகூா்ந்து மெழுகுவா்த்தி ஏந்தி உறுதிமொழி ஏற்றனா்.

நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியா்கள் கஸ்தூரி, ஹேமா, வசந்தகுமாரி, வினிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, கல்லூரி முதல்வா் மேனகா காந்தி வரவேற்றாா். துணை முதல்வா் சத்தியா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.