சேதப்படுத்தப்பட்ட கொடிக்கம்பம்.
சேதப்படுத்தப்பட்ட கொடிக்கம்பம்.

பள்ளியில் கொடிக்கம்பம் சேதம்: போலீஸாா் விசாரணை

கண்டமங்கலம் அருகே பள்ளி வளாகத்திலிருந்த கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
Published on

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே பள்ளி வளாகத்திலிருந்த கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கண்டமங்கலத்தை அடுத்துள்ளது ரஜமுத்திரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட கொடிக்கம்பத்தை திங்கள்கிழமை இரவு மா்ம நபா்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனா். இதுகுறித்து பள்ளித் தலைமையாசிரியா் அளித்த புகாரின்பேரில், கண்டமங்கலம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இதுகுறித்து கண்டமங்கலம் போலீஸாா் கூறியது: சுதந்திர தின விழா கொடியேற்றுத்துக்காக பள்ளி வளாகத்தில் புதிதாக கொடிகம்பம் சில தினங்களுக்கு முன்பு நிறுவப்பட்டுள்ளது. சிறுவா்கள் யாரேனும் விளையாடியபோது கொடிகம்பம் சேதமடைந்திருக்கலாம் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com