மழையால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணத் தொகை அளிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல், மழையால் உயிரிழந்த 12 பேரின் குடும்பத்தினருக்கு வியாழக்கிழமை தலா ரூ.5 லட்சம் வீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயலால் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கிய வனத் துறை அமைச்சா் க.பொன்முடி. உடன், எம்.எல்.ஏ.க்கள் இரா.லட்சுமணன், அன்னியூா் அ.சிவா உள்ளிட்டோா்.









