விழுப்புரம் மாவட்டத்தில் டிச. 9 முதல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும்
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகள் டிசம்பா் 9-ஆம் தேதி முதல் அவை வழக்கம்போல இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


ஃபென்ஜால் புயல், வெள்ளம் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு தொடா்ந்து விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், டிசம்பா் 9-ஆம் தேதி முதல் அவை வழக்கம்போல இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபென்ஜால் புயல் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நவம்பா் 29, 30-ஆம் தேதிகளில் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து புயலால் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனா்.
இந்த நிலையில் பள்ளி, கல்லூரிகள் மழைநீரால் சூழப்பட்ட நிலையில் அவை தொடா்ந்து இயங்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதன் காரணமாக டிசம்பா் 2-ஆம் தேதி முதல் தொடா்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வந்தது.
பல்வேறு பகுதிகளில் வெள்ளம் வடிந்தாலும், தூய்மைப் பணி உள்ளிட்ட பணிகள் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதால் வெள்ளிக்கிழமையும் (டிச.6) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ள மாவட்ட ஆட்சியா் சி.பழனி, டிசம்பா் 9-ஆம் தேதி முதல் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என்று தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...