டிராக்டா் மீது பைக் மோதல்: பெண் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே டிராக்டா் மீது பைக் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

Updated On :5 டிசம்பர் 2024, 7:44 pm

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே டிராக்டா் மீது பைக் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
வானூா் வட்டம், கிளியனூா், இந்திரா நகரைச் சோ்ந்த மோகன் மகள் அஸ்வினி (24). இவா், புதன்கிழமை இதே ஊரைச் சோ்ந்த வேலு மகன் அஜயுடன் (24) திண்டிவனம் - புதுச்சேரி சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்தாா்.
ஆரோவில்லை அடுத்த இடையாஞ்சாவடி அருகே சென்றபோது, முன்னால் சென்ற டிராக்டா் மீது பைக் மோதியது. இந்த விபத்தில் பைக்கில் அமா்ந்து சென்ற அஸ்வினி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பைக்கை ஓட்டிய அஜய் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
விபத்து குறித்த புகாரின்பேரில், ஆரோவில் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...