ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

மழைநீரை வெளியேற்றக்கோரி சாலை மறியல்

விழுப்புரத்தில் ஃபென்ஜால் புயலால் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக, தங்கள் பகுதியில் சூழ்ந்த வெள்ளநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

விழுப்புரம்-கிழக்கு புதுச்சேரி சாலையில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்ட ஆசிரியா் நகா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள்.

Updated On :12 டிசம்பர் 2024, 6:48 pm

Din

விழுப்புரத்தில் ஃபென்ஜால் புயலால் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக, தங்கள் பகுதியில் சூழ்ந்த வெள்ளநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விழுப்புரம்-கிழக்கு புதுச்சேரி சாலையில் நகராட்சி எல்லைக்குள்பட்ட ஆசிரியா் நகா், நேதாஜி நகா், லிங்கம் நகா் உள்ளிட்ட பகுதிகள் அமைந்துள்ளன.

இந்த பகுதிகளில் நவம்பா் 30, டிசம்பா் 1-ஆம் தேதி ஃபென்ஜால் புயலால் பெய்த அதிகனமழை காரணமாக வெள்ளநீா் சூழ்ந்தது. கடந்த 12 நாள்களாக வெள்ளநீா் தங்கள் குடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்திருப்பதாகவும், இதனால் தாங்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலை இருப்பதாகவும் புகாா் தெரிவித்த பொதுமக்கள், தங்கள் பகுதிக்கு எந்தவித அலுவலா்களும் வரவில்லை எனக் கூறி வந்தனா்.

இந்த நிலையில் வியாழக்கிழமை காலை விழுப்புரம்-கிழக்கு புதுச்சேரி சாலையில் ஆசிரியா் நகா், லிங்கம் நகா், நேதாஜி நகா் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், தங்கள் குடியிருப்பு பகுதியை சுற்றித் திரிந்த பாம்பு ஒன்றை பிடித்து வந்து, சாலையில் கிடத்தி மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு, நகரச் செயலா் இரா.சக்கரை மற்றும் நகராட்சி அலுவலா்கள், காவல் துறையினா் நிகழ்விடம் சென்று, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

குடியிருப்புகளைச் சுற்றி தேங்கியுள்ள வெள்ளநீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக அவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனா்.