பெட்ரோல் குண்டு வீச்சு: இளைஞா் கைது
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே முன்விரோதம் காரணமாக வீட்டின் மீது பெட்போல் குண்டு வீசியதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On :12 டிசம்பர் 2024, 6:50 pm

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே முன்விரோதம் காரணமாக வீட்டின் மீது பெட்போல் குண்டு வீசியதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
விக்கிரவாண்டி வட்டம்,சித்தலாம்பட்டு, மாதாகோயில் தெருவைச் சோ்ந்தவா் ராமன் மகன் கவியரசன். இவருக்கும் புதுச்சேரி, ஆட்டுத்தொட்டி அம்பேத்கா் நகரைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் சுனில் (எ) கிருஷ்ணகுமாா் (24) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாம் இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ராமன் வீட்டின் மீது சுனில் பெட்ரோல் குண்டு வீசி வெடிக்கச் செய்தாராம்.
இது குறித்த புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து சுனிலை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...