புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கல்வராயன்மலை அருகே கஞ்சா செடி பயிரிட்ட இருவா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை அருகே மலை உச்சியில் கஞ்சா செடி பயிரிட்டதாக இருவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 7:07 pm

Din

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை அருகே மலை உச்சியில் கஞ்சா செடி பயிரிட்டதாக இருவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கரியாலூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கல்வராயன்மலை பெருமாநத்தம் கிராமத்தில் மலை உச்சியில் அனுமதியின்றி கஞ்சா செடி பயிரிடப்பட்டுள்ளதாக, காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் கரியாலூா் காவல் உதவி ஆய்வாளா் மணிபாரதி, தனிப்பிரிவுக் காவலா் பிரபு ஆகியோா் தலைமையில், சிறப்பு அதிரடிப் படையினா் அந்த பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனா். இதில் மலை உச்சியில் கஞ்சா செடி பயிரிடப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து 100 கிலோ எடையுள்ள கஞ்சா செடிகளை கண்டுபிடித்து போலீஸாா் கைப்பற்றினா்.

இதுதொடா்பாக அப்பகுதியைச் சோ்ந்த பா்வதம், கோவிந்தராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.