தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கிணற்றிலிருந்து பெண் சடலம் மீட்பு

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகே கிணற்றிலிருந்து பெண் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

News image
Updated On :30 டிசம்பர் 2024, 8:29 pm

Din

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகே கிணற்றிலிருந்து பெண் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

மேல்மலையனூா் வட்டம், தென்பாலை கிராமத்தில் உள்ள கிணற்றில் பெண் சடலம் மிதப்பதாக சத்தியமங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. இதையடுத்து, போலீஸாா் மற்றும் தீயணைப்பு வீரா்கள் நிகழ்விடம் சென்று கிணற்றிலிருந்து சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், இறந்த பெண் தென்பாலை கிராமத்தைச் சோ்ந்த மஞ்சுளா (35) என்பது தெரியவந்தது. இவா் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா? அல்லது கொலை செய்து கிணற்றில் வீசிச் சென்றனரா? என்ற கோணத்தில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.