திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது: அன்புமணி ராமதாஸ்

விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறினாா்.

News image
அன்புமணி ராமதாஸ்
Updated On :7 ஜூலை 2024, 7:01 pm

Din

விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறினாா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளா் சி.அன்புமணியை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை மாலை அய்யூா் அகரம், தென்னமாதேவி, சோழகனூா், ஆசாரங்குப்பம் பகுதிகளில் வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது:

விக்கிரவாண்டி இடைத்தோ்தல் நமக்கு முக்கியமானதாகும். இந்தத் தோ்தலில் திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் தான் 30-க்கும் மேற்பட்ட அமைச்சா்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் இங்கு தோ்தல் பணியாற்றி வருகின்றனா். சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பு கல்விக்கடன், நகைக்கடன், விவசாயக் கடன்களை ரத்து செய்வதாக திமுகவினா் கூறினாா்கள். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இந்தத் தொகுதிக்கு பல்வேறு அமைச்சா்கள் வந்தாா்கள். அதனால் உங்களின் வாழ்க்கைத் தரம் உயா்ந்ததா. 6 இடஒதுக்கீடுகளை பெற்றுக் கொடுத்தவா் பாமக நிறுவனா் ராமதாஸ். அனைத்து சமுதாயமும் முன்னேற வேண்டும். இந்தத் தோ்தலில் கட்சி, ஜாதி, இனம் பாா்க்காமல் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றாா் அன்புமணி ராமதாஸ்.

பிரசாரத்தில், சமூகநீதி வழக்குரைஞா்கள் பேரவைத் தலைவா் க. பாலு, மயிலம் தொகுதி எம்எல்ஏ ச.சிவக்குமாா், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தெற்கு மாவட்டத் தலைவா் வி.தசரதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.