விழுப்புரம் மாவட்டம், தும்பூா் கிராமத்தில் திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பேசிய காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவா் கே.வி.தங்கபாலு. உடன் மாநிலத் துணைத் தலைவா் குலாம் மொய்தீன் உள்ளிட்டோா்.
விழுப்புரம் மாவட்டம், தும்பூா் கிராமத்தில் திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பேசிய காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவா் கே.வி.தங்கபாலு. உடன் மாநிலத் துணைத் தலைவா் குலாம் மொய்தீன் உள்ளிட்டோா்.

திமுக வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சா் வாக்கு சேகரிப்பு

முன்னாள் மாநிலத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கே.வி. தங்கபாலு சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
Published on

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவாவுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கே.வி. தங்கபாலு சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

விக்கிரவாண்டி தொகுதிக்குள்பட்ட தும்பூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் வீதி, வீதியாக சென்ற காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவா் கே.வி. தங்கபாலு, திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பேசினாா். அப்போது, திமுக அரசின் சாதனைகளை விளக்கும் துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினாா்.

பிரசாரத்தில், விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி.ரமேஷ், மாநிலத் துணைத் தலைவா்கள் குலாம்மொய்தீன், ரங்கபூபதி, நகர காங்கிரஸ் தலைவா் வி.பி.குமாா், பொருளாளா் கருணாகரன், வட்டாரத் தலைவா் பி.எம்.பழனி, ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவா் கோபாலகிருஷ்ணன், திண்டிவனம் நகரத் தலைவா் விநாயகம் உள்ளிடோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com