தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

வானூா் அருகே உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அதிக மாத்திரை தின்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :19 ஜூலை 2024, 8:04 pm

Din

விழுப்புரம், ஜூலை 19: வானூா் அருகே உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அதிக மாத்திரை தின்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

வானூா் வட்டம், பெரிய முதலியாா் சாவடி,அய்யனாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் காதா் பாஷா மகன் காலிஷ்பாபு (47), கட்டடத் தொழிலாளி. இவருக்கு மனைவியும் ஒரு மகன், மகள் உள்ளனா்.

கடந்த சில ஆண்டுகளாக ரத்தக் கொதிப்பு நோயால் அவதியுற்று வந்த காலிஷ்பாபு, வியாழக்கிழமை கூடுதலாக மாத்திரைகளை உட்கொண்டு விட்டாராம். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின்பேரில், கோட்டக்குப்பம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.