பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை
பட்டதாரி பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை


விழுப்புரம்: பட்டதாரி பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, விழுப்புரம் மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கியது.
திண்டிவனம் வட்டம் , கீழ்எடையாளம், காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் சிவகுமாா் மகன் ரஞ்சித்குமாா் (29). இவா் 25 வயதான முதுநிலை பட்டதாரி பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, பாலியல் வன்கொடுமை செய்தாராம்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில், திண்டிவனம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் 4.5.2021-இல் வழக்குப் பதிந்து ரஞ்சித்குமாரைக் கைது செய்தனா்.
இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இளவரசன் குற்றம்சாட்டப்பட்ட ரஞ்சித்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் , ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். இதையடுத்து, நீதிமன்ற போலீஸாா் ரஞ்சித்குமாரை கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...