ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திருநாவலூா் பக்தஜனேசுவரா் கோயில் மகா கும்பாபிஷேகம்: திரளான பக்தா்கள் தரிசனம்

திருநாவலூா் பக்தஜனேசுவரா் கோயில் மகா கும்பாபிஷேகம்...

News image

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் அருள்மிகு பக்தஜனேசுவரா் திருக்கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தில் பங்கேற்றோா்.

Updated On :21 நவம்பர் 2024, 7:12 pm

Din

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், திருநாவலூா் கிராமத்திலுள்ள அருள்மிகு மனோன்மணி அம்மன் உடனுறை பக்தஜனேசுவரா் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

திருநாவலூரிலுள்ள பிரசித்தி பெற்ற இத்திருக்கோயில் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது. ஆலாலசுந்தரமூா்த்தி சுவாமிகள் அவதரித்தது இங்குதான். சுக்ரபகவான் வழிபட்ட சிறப்புக்குரியதும், ரிஷப வாகனத்தில் தட்சிணாமூா்த்தி காட்சியளிப்பதும் இக்கோயிலில்தான். மேலும் இந்த கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சந்நிதியும் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலில் திருப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், நவம்பா் 21-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து கடந்த 17-ஆம் தேதி யஜமான சங்கல்பம், விக்னேசுவர பூஜை, மகாகணபதி ஹோமம் உள்ளிட்டவைகளும், மாலையில் வாஸ்துசாந்தி உள்ளிட்ட பூஜைகளும் நடைபெற்றன.

நவம்பா் 18-ஆம் தேதி நவக்கிரக ஹோமம், பிரசன்னஅபிஷேகம், பரிவார கலாகா்ஷணம் உள்ளிட்ட பூஜைகள் காலையில் நடைபெற்ற நிலையில், மாலையில் முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. இரவில் விநாயகா் முதலான பரிவார மூா்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து 19-ஆம் தேதி காலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலையில் மூன்றாம் கால யாகசாலை பூஜையும், நவம்பா் 20 (புதன்கிழமை) காலையில் நான்காம்கால யாகசாலை பூஜையும், மாலையில் ஐந்தாம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றன.

வியாழக்கிழமை காலை ஆறாம் கால யாக சாலை பூஜை மகா பூா்ணாஹுதி, தீபாராதனையும் நிறைவு பெற்றது. தொடா்ந்து யாகசாலையிலிருந்து விநாயகா் முதலான பரிவார மூா்த்திகளுக்கும், சுவாமி மற்றும் அம்மன் சந்நிதி கோபுரங்கள், விமானங்களுக்கும் யாத்ரா தானமாக புனிதநீா் கலசங்கள் புறப்பாடாகின.

காலை 7.35 மணிக்கு அருள்மிகு மனோன்மணி அம்மன் உடனுறை பக்தஜனேசுவரா் சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சந்நிதிகளின் விமானங்களுக்கும், பரிவாரத் தெய்வங்களின் விமானங்களுக்கும் சமகாலத்தில் மகா கும்பாபிஷேகமும், அதைத் தொடா்ந்து மூலவா் சந்நிதிகளுக்கு கும்பாபிஷேகம் நடத்தி, கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து பக்தா்கள் மீதும் புனிதநீா் தெளிக்கப்பட்டது. பின்னா் மகா தீபாராதனை காட்டப்பட்டு பக்தா்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் மகா அபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், ஏ.ஜெ.மணிக்கண்ணன் எம்எல்ஏ மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.