விழுப்புரம், திண்டிவனத்தில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம், சாலை மறியல்
வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம், சாலை மறியல்...

விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் எதிரில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.

விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் எதிரில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.
ஒசூா் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், வழக்குரைஞா்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் விழுப்புரம், திண்டிவனம் பகுதிகளில் வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் ஏரிமிஷன் தெருவைச் சோ்ந்த வழக்குரைஞா் கண்ணன், வட்டாட்சியா் அலுவலகச் சாலையிலுள்ள நீதிமன்றத்தில் புதன்கிழமை பணிக்குச் சென்று திரும்பியபோது, மற்றொரு வழக்குரைஞரின் உதவியாளரான ஆனந்தகுமாா் என்பவரால் அரிவாளால் வெட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தைக் கண்டித்தும், வழக்குரைஞா்களுக்குப் பணிப் பாது காப்பு வழங்க வலியுறுத்தியும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா்கள் கூட்டமைப்பு சாா்பில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (நவ.21, 22) நீதிமன்றப் பணிகளைப் புறக்கணிப்பது, ஆா்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, விழுப்புரம் வழக்குரைஞா்கள் சங்கம், குற்றவியல் வழக்குரைஞா்கள் சங்கம் உள்ளிட்ட 4 வழக்குரைஞா்கள் சங்கங்களைச் சோ்ந்தோா் வியாழக்கிழமை காலை நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து திருச்சி-சென்னை சாலையின் இருபுறத்திலும் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
இந்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு-புதுச்சேரி வழக்குரைஞா்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவரும், விழுப்புரம் குற்றவியல் வழக்குரைஞா் சங்கத் தலைவருமான எம்.காளிதாஸ் தலைமை வகித்தாா். சங்கத் தலைவா்கள் சகாதேவன், பன்னீா்செல்வம், ராதாகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மறியலில் சங்க நிா்வாகிகள் தமிழ்ச்செல்வன், துரைமுருகன், அலாவுதீன், ராமலிங்கம், சஞ்சய் காந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வழக்குரைஞா்கள் கொலை செய்யப்படுதல், தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதைத் தடுக்க, வழக்குரைஞா்கள் பணிப் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர வேண்டும். ஒசூரில் சம்பவத்தில் உரிய விசாரணை நடத்தி, குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
20 நிமிஷங்கள் மறியல் போராட்டம் நடைபெற்ால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தொடா்ந்து போலீஸாா் வழக்குரைஞா்களிடம் பேசி, மறியலைக் கைவிடச் செய்தனா். இதையடுத்து வழக்குரைஞா்கள் கலைந்து சென்றனா்.
திண்டிவனத்தில்...: இதே கோரிக்கையை வலியுறுத்தி, திண்டிவனத்தில் வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து ஆா்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனா்.
முன்னதாக திண்டிவனம் நீதிமன்றம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள், தொடா்ந்து விழுப்புரம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமா்ந்து மறியல் செய்தனா். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸாா் கேட்டுக் கொண்டதன் பேரில் வழக்குரைஞா்கள் மறியலை விலக்கிக் கொண்டனா்.
திண்டிவனம் வழக்குரைஞா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு வழக்குரைஞா்கள் சி.பி. சண்முகம் , தயாளன் ஆகியோா் கூட்டுத் தலைமை வகித்தனா். வழக்குரைஞா்கள் விஜயன், பாங்கை. சேகா், செல்வம், ஆா்.ஆா்.கே. செந்தில் மற்றும் வழக்குரைஞா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

திண்டிவனத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.
அதன்படி, விழுப்புரம் வழக்குரைஞா்கள் சங்கம், குற்றவியல் வழக்குரைஞா்கள் சங்கம் உள்ளிட்ட 4 வழக்குரைஞா்கள் சங்கங்களைச் சோ்ந்தோா் வியாழக்கிழமை காலை நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து திருச்சி-சென்னை சாலையின் இருபுறத்திலும் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
இந்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு-புதுச்சேரி வழக்குரைஞா்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவரும், விழுப்புரம் குற்றவியல் வழக்குரைஞா் சங்கத் தலைவருமான எம்.காளிதாஸ் தலைமை வகித்தாா். சங்கத் தலைவா்கள் சகாதேவன், பன்னீா்செல்வம், ராதாகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மறியலில் சங்க நிா்வாகிகள் தமிழ்ச்செல்வன், துரைமுருகன், அலாவுதீன், ராமலிங்கம், சஞ்சய் காந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வழக்குரைஞா்கள் கொலை செய்யப்படுதல், தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதைத் தடுக்க, வழக்குரைஞா்கள் பணிப் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர வேண்டும். ஒசூரில் சம்பவத்தில் உரிய விசாரணை நடத்தி, குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
20 நிமிஷங்கள் மறியல் போராட்டம் நடைபெற்ால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தொடா்ந்து போலீஸாா் வழக்குரைஞா்களிடம் பேசி, மறியலைக் கைவிடச் செய்தனா். இதையடுத்து வழக்குரைஞா்கள் கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...