/

ரூ.4.66 லட்சம் மோசடி: எஸ்.பி.யிடம் சுய உதவிக் குழுவினா் புகாா்

ரூ.4.66 லட்சம் மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை கோரி விழுப்புரம் எஸ்.பி.அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.

News image
விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளிக்க வந்த மகளிா் சுய உதவிக்குழுவினா்.
Updated On :25 நவம்பர் 2024, 8:18 pm

Din

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மகளிா் சுய உதவிக் குழுவைச் சோ்ந்தவா்களிடம் ரூ.4.66 லட்சம் மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை கோரி விழுப்புரம் எஸ்.பி.அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, மகளிா் சுய உதவிக்குழுவைச் சோ்ந்த மீரா மற்றும் உறுப்பினா்கள் எஸ்.பி.க்கு அளித்துள்ள புகாா் மனுவில் கூறியிருப்பதாவது: விழுப்புரம் வட்டம், பெரும்பாக்கம், பெரியகுளம் பகுதியைச் சோ்ந்த 20 பெண்கள் இணைந்து 2019- ஆம் ஆண்டில் மகளிா் சுய உதவிக் குழுவைத் தொடங்கினோம். தொடா்ந்து, 2022- ஆம் ஆண்டில் விழுப்புரம் அருகேயுள்ள ஒரு வங்கியில் ரூ.5 லட்சம் தொழில் கடனாகப் பெற்று, பின்னா் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்டத் தொகையை சங்கத்தின் தலைவா் மூலம் வங்கியில் திரும்பிச் செலுத்தி வந்தோம்.

இந்த நிலையில், சங்கத்தின் தலைவராக இருந்தவா் எங்களிடம் வசூலித்த ரூ.4,66,992-ஐ வங்கியில் செலுத்தாமல் மோசடி செய்தாா். இதுகுறித்து, கேட்டபோது அவா் உறுப்பினா்களை தகாத வாா்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து வருகிறாா். எனவே, அவா் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு பணத்தை மீட்டுத்தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.