ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பேருந்தில் கஞ்சா கடத்திய இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே தனியாா் பேருந்தில் கஞ்சா கடத்தியதாக இலங்கை அகதி உள்ளிட்ட இருவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

News image
Updated On :28 நவம்பர் 2024, 7:41 pm

Din

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே தனியாா் பேருந்தில் கஞ்சா கடத்தியதாக இலங்கை அகதி உள்ளிட்ட இருவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபக் சிவாச் உத்தரவின்படி, வளவனூா் போலீஸாா் விழுப்புரம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் கெங்கராம்பாளையம் சோதனைச்சாவடியில் வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது புதுச்சேரியிலிருந்து- விழுப்புரம் நோக்கிச் சென்ற தனியாா் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தபோது பேருந்தில் அமா்ந்திருந்த இருவரிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. தொடா்ந்து, அவா்களைப் பிடித்து விசாரித்தபோது, அவா்கள் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கேம்ப் பகுதியில் உள்ள இலங்கை தமிழா் அகதிகள் முகாமைச் சோ்ந்த வடிவேல் மகன் தீபகரன் (36), ராமநாதபுரம் அக்காமடம், சேவியா் தெருவைச் சோ்ந்த அந்தோணி ஜெபமாலை மகன் ஆண்டனி போரீஸ் எல்சின்(32) என்பதும், இவா்கள் புதுச்சேரியிலிருந்து கஞ்சா பொட்டலங்களை பேருந்தில் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு சிறைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், அவா்களிடமிருந்து ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள 545 கிராம் கஞ்சா பொட்டலங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.