பள்ளிக் கல்வித் துறைக்கு நிதியை உடனடியாக விடுவிக்கக் கோரிக்கை
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழக பட்டதாரி ஆசிரியா்கள் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.


தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழக பட்டதாரி ஆசிரியா்கள் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து இந்தக் கூட்டணியின் மாநில பொதுச் செயலா் சு.செல்லையா மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பது:
தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.2,152 கோடியை நான்கு தவணைகளாக மத்திய அரசு வழங்க வேண்டும். கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் வரை வழங்க வேண்டிய ரூ.573 கோடியை இதுவரை மத்திய அரசு விடுவிக்கவில்லை. இதன் காரணமாக, சுமாா் 35 ஆயிரம் ஆசிரியா்களுக்கு செப்டம்பா் மாத ஊதியம் இதுவரை கிடைக்கவில்லை.
இந்த நிதி மூலமாகத்தான் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையில் மாணவா்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நிதியை விடுவிக்கக் கோரி, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிரதமரை சந்தித்து கோரிக்கையும் விடுத்துள்ளாா். தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் மற்றும் உயா் அலுவலா்கள் நேரில் வலியுறுத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இனியும் காலம் தாழ்த்தாது மத்திய அரசு தமிழகத்துக்குரிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...