கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இன்று ஆயுத பூஜை: பொருள்கள் வாங்க கடைவீதிகளில் குவிந்த மக்கள்

ஆயுதபூஜை வெள்ளிக்கிழமை கொண்டாடவுள்ள நிலையில், விழுப்புரத்திலுள்ள கடைவீதிகளில் பூஜைக்கான பொருள்களை வாங்க பொதுமக்கள் குவிந்தனா்.

News image

ஆயுத பூஜை பண்டிகைக்காக, விழுப்புரம் மகாத்மாகாந்தி சாலையிலுள்ள கடையில் வியாழக்கிழமை பொரி வாங்கும் மக்கள்.

Updated On :10 அக்டோபர் 2024, 7:15 pm

Din

ஆயுதபூஜை வெள்ளிக்கிழமை கொண்டாடவுள்ள நிலையில், விழுப்புரத்திலுள்ள கடைவீதிகளில் பூஜைக்கான பொருள்களை வாங்க பொதுமக்கள் குவிந்தனா்.

ஹிந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி வழிபாடு. 9 நாள்கள் நடைபெறும் இந்த வழிபாட்டில் முதல் 3 நாள்கள் துா்கையையும், அடுத்த மூன்று நாள்கள் லட்சுமியையும், கடைசி மூன்று நாள்கள் சரசுவதியையும் வழிபடுகின்றனா். தொடா்ந்து ஆயுத பூஜை மற்றும் சரசுவதி பூஜை கொண்டாடப்படும்.

நிகழாண்டில் ஆயுதபூஜை வெள்ளிக்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், விழுப்புரத்தில் பொருள்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. மகாத்மா காந்தி சாலை, காமராஜா் வீதி, பாகா்ஷா வீதி, பழைய பேருந்து நிலையம், ரயில் நிலையச் சாலை, ஜவாஹா்லால் நேரு சாலை, வீரவாழியம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் பழங்கள், பொரி, பூக்கள் போன்றவற்றின் விற்பனை நடைபெற்றது.

ஆயுதபூஜை கொண்டாட்டத்தில் முக்கியமாக வைக்கப்படும் பொரி, லிட்டா் ரூ.30 முதல் ரூ.40 வரையியும், வாழைப்பழம் சீப்பு தரத்துக்கேற்றவாறு ரூ.40, 50 -ம், தாா் ரூ.450 முதல் ரூ.650 வரையிலான விலைகளிலும், எலுமிச்சை பழம் 4 எண்ணிக்கை ரூ.20 முதல் 25, மூன்று எண்ணிக்கை ரூ.15 என்ற விலைகளிலும் அளவுக்கேற்றவாறு விற்பனையானது

ஆப்பிள் கிலோ ரூ.180 முதல் ரூ.200, மாதுளை கிலோ ரூ.200 முதல் ரூ.250, சாத்துக்குடி கிலோ ரூ.80 முதல் ரூ.130 என்ற விலைகளில் விற்பனையானது. இதைத் தவிர தேங்காய் ரூ.20, 25, 30, 35 என்ற விலைகளில் விற்பனை செய்யப்பட்டது.

திருஷ்டி கழிக்கப் பயன்படுத்தப்படும் பூசணிக்காய் ரூ.40 முதல் ரூ.60 வரையிலும், வாழைக்கன்று ஜோடி ரூ,30 முதல் ரூ.60 வரையும் விற்பனை செய்யப்பட்டன. மேலும் தொழில் நிறுவனங்கள், வா்த்தக நிறுவனங்களின் முகப்புகளிலும், உள்பகுதிகளிலும் தொங்க விடுவதற்கான அலங்காரத் தோரணங்களின் விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

 விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள மொத்த பூ விற்பனையகத்தில் பூக்களை வாங்கும் பெண்கள்.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள மொத்த பூ விற்பனையகத்தில் பூக்களை வாங்கும் பெண்கள்.

பூக்களின் விலை கடுமையாக உயா்வு: ஆயுதபூஜையையொட்டி விழுப்புரத்திலுள்ள மொத்த விற்பனையகங்களில் பூக்களின் விலை கடுமையாக உயா்ந்து காணப்பட்டது. மல்லிகைப் பூ கிலோ ரூ.800, காக்கட்டான் கிலோ ரூ.700, முல்லை கிலோ ரூ.550, ஜாதி பூ கிலோ ரூ.650, சாமந்தி கிலோ ரூ.250, ரோஜா கிலோ ரூ.340, சம்பங்கி கிலோ ரூ.350 முதல் ரூ.400, குண்டுமல்லி கிலோ ரூ.700 முதல் ரூ.850 என்ற விலைகளில் மொத்த பூ விற்பனையகங்களில் வியாழக்கிழமை விற்பனையானது.

  ஆயுத பூஜைக்கான பொருள்களை வாங்க குவிந்த பொதுமக்களால் நெரிசல் மிகுந்து காணப்பட்ட விழுப்புரம் மகாத்மா காந்தி சாலை.

ஆயுத பூஜைக்கான பொருள்களை வாங்க குவிந்த பொதுமக்களால் நெரிசல் மிகுந்து காணப்பட்ட விழுப்புரம் மகாத்மா காந்தி சாலை.

ஆயுதபூஜை பண்டிகை காரணமாக பூக்களின் விலை உயா்ந்துள்ளது. இந்த விலை வெள்ளிக்கிழமை கடுமையாக உயா்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா். இந்த விலையைக் காட்டிலும் சில்லறை வியாபாரிகளிடம் சற்று அதிகரித்து காணப்படலாம் எனவும் அவா்கள் தெரிவித்தனா்.