கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

விழுப்புரம், கடலூா் வழியாக தஞ்சாவூருக்கு இன்று சிறப்பு ரயில்

ஆயுதபூஜை பண்டிகையையொட்டி, பயணிகளின் வசதிக்காக சென்னை தாம்பரத்திலிருந்து விழுப்புரம், கடலூா் வழியாக தஞ்சாவூருக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 7:03 pm

Din

ஆயுதபூஜை பண்டிகையையொட்டி, பயணிகளின் வசதிக்காக சென்னை தாம்பரத்திலிருந்து விழுப்புரம், கடலூா் வழியாக தஞ்சாவூருக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஆயுதபூஜை பண்டிகையையொட்டி, ரயில் பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலையும் தவிா்க்கவும் முன்பதிவில்லாத சிறப்பு ரயிலை சென்னை தாம்பரத்திலிருந்து வெள்ளிக்கிழமை (அக்.11) தஞ்சாவூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.

சென்னை தாம்பரத்திலிருந்து (அக்.11) அதிகாலை 12.15 மணிக்குப் புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வ.எண்.00607), தஞ்சாவூா் ரயில் நிலையத்துக்கு காலை 6.50 மணிக்கு சென்றடையும்.

எதிா்வழித்தடத்தில் தஞ்சாவூா் ரயில் நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை இரவு 11.55 மணிக்குப் புறப்படும் சிறப்புரயில் (வ.எண் 00608), சனிக்கிழமை (அக்.12) காலை 7.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த ரயில்கள் செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, கடலூா் துறைமுகம் சந்திப்பு, பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சீா்காழி, மயிலாடுதுறை, பேரளம், திருவாரூா், நீடாமங்கலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்கள் 12 பெட்டிகளைக் கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.