கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு தொழில்முனைவோா் பயிற்சி

செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில், சுயஉதவிக் குழுக்களுக்கான தொழில்முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த முகாம் 3 நாள்கள் நடைபெறவுள்ளது.

News image

செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற தொழில்முனைவோா் பயிற்சி முகாமை தொடங்கிவைத்துப் பேசிய செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ.

Updated On :15 அக்டோபர் 2024, 8:02 pm

Din

செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில், சுயஉதவிக் குழுக்களுக்கான தொழில்முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த முகாம் 3 நாள்கள் நடைபெறவுள்ளது.

முகாமுக்கு மாவட்ட மகளிா் திட்ட அலுவலா் காஞ்சனா தலைமை வகித்தாா். செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா் முன்னிலை வகித்தாா். செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ கலந்துகொண்டு முகாமை தொடங்கிவைத்து பயிற்சி முகாம் குறித்து விளக்கிக் கூறினாா்.

உதவித் திட்ட அலுவலா் அருண்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சீத்தாலட்சுமி, முல்லை, ஒன்றியக்குழு உறுப்பினா் பச்சையப்பன், சமுதாய அமைப்பாளா் சரண்யா, செஞ்சி வட்டார மகளிா் சுயஉதவிக் குழு ஒருங்கிணைப்பாளா்கள், சுயஉதவிக் குழுக்கள் தொழில்முனைவோா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முகாமில் மகளிா் குழுக்கள் பல்வேறு தொழில்களை செய்வதற்கும், சுயதொழில் செய்வதற்குமான பயிற்சி, ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

நீா்த்தேக்கத் தொட்டிகள் திறப்பு: ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், செஞ்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஒதியத்தூா் ஊராட்சியிலும், பாடிப்பள்ளம் ஊராட்சிக்குள்பட்ட சென்னாலூா் கிராமத்திலும் தலா ரூ.8.04 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளை மக்கள் பயன்பாட்டுக்கு செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், துணைத் தலைவா் ஜெயபாலன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் ஹரி, தாட்சாயிணி காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.