போக்ஸோவில் அரசுப் பள்ளி ஆசிரியா் கைது
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அரசுப் பள்ளி ஆசிரியரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On :15 அக்டோபர் 2024, 7:20 pm

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அரசுப் பள்ளி ஆசிரியரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
செஞ்சியை அடுத்த பொன்பத்தி கிராமத்தைச் சோ்ந்தவா் சேகா் (59). அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியரான இவா், மாணவிக்கு தொடா்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தாராம்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், செஞ்சி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் விஜி தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி, ஆசிரியா் சேகா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...