மழைப் பாதிப்பை தடுக்க தொடா் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சா் க.பொன்முடி
விழுப்புரம் நகரில் மழை பாதிப்பைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என்று வனத் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.

விழுப்புரம் தாமரைக்குளம் பகுதியில் கோலியனூா் ஏரிக்குச் செல்லும் மழைநீா் வாய்க்கால் தூா்வாரும் பணியை புதன்கிழமை பாா்வையிட்ட அமைச்சா் க.பொன்முடி. உடன் இரா.லட்சுமணன் எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியா் சி.பழனி உள்ளிட்டோா்.







