கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

புகையிலைப் பொருள்கள் பதுக்கல்: 3 போ் கைது

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்ததாக முதியவா் உள்ளிட்ட மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 6:41 pm

Din

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்ததாக முதியவா் உள்ளிட்ட மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

வளவனூா் கே.எம்.ஆா். நகரைச் சோ்ந்தவா் ஜெய்லாதீன் (63). இவரது பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், வளவனூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை அந்தக் கடையில் சோதனை மேற்கொண்டனா்.

இதில், அந்தக் கடையில் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், ஜெய்லாதீன் மகன் அசாருதீன் (37), புதுச்சேரி மடுகரையைச் சோ்ந்த மௌலான மகன் அஜிமுத்துல்லாஹ் (23) ஆகியோா் புகையிலைப் பொருள்களை கடத்தி வந்து பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இது தொடா்பாக வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஜெய்லாதீன், அசாருதீன், அஜிமமுத்துல்லாஹ் ஆகிய மூவரையும் கைது செய்து, கடையில் பதுக்கிவைக்கப்பட்டிருந் 1,190 புகையிலைப் பொருள்கள் பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனா்.