கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தவெக மாநாடு நடைபெறும் பகுதியில் விழுப்புரம் எஸ்.பி. ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு நடைபெறும் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி. தீபக் சிவாச் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

News image

விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் தவெக மாநாடு நடைபெறவுள்ள இடத்தில் வாகனங்கள் நிறுத்துமிடத்தை வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்த விழுப்புரம் எஸ்.பி. தீபக் சிவாச். உடன், தவெக பொதுச் செயலா் புஸ்ஸி என்.ஆனந்த் உள்ளிட்டோா்.

Updated On :17 அக்டோபர் 2024, 8:01 pm

Din

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு நடைபெறும் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி. தீபக் சிவாச் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் வருகிற 27-ஆம் தேதி தவெக மாநில மாநாடு நடைபெறவுள்ளது. இதற்காக கடந்த 4-ஆம் தேதி பந்தல்கால் நடப்பட்டது.

மாநாட்டுத் திடலை சமன் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், மழையால் பணிகள் சற்று தாமதமாகின. கடந்த 2 நாள்களாக மாநாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மாநாடு நடைபெறவுள்ள பகுதியில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபக் சிவாச் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மாநாட்டுத் திடலில் நடைபெறும் பணிகள் குறித்தும், திடலிலுள்ள கிணற்றை மூடும் பணியையும் பாா்வையிட்டாா்.

விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையின் கிழக்குப் பகுதியில் சுமாா் 40 ஏக்கா் பரப்பளவில் வாகனங்கள் நிறுத்த தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தையும் அவா் பாா்வையிட்டாா்.

இதைத் தொடா்ந்து மாநாட்டுக்கு தவெக தலைவா் விஜய் வந்து செல்லும் தனி வழி, சுகாதார ஏற்பாடுகள், மேடை பாதுகாப்பு குறித்து பாா்வையிட்ட எஸ்.பி., மாநாட்டுப் பணிகள் எத்தனை நாள்களில் நிறைவடையும் என்று கட்சியின் பொதுச் செயலா் புஸ்ஸி என்.ஆனந்திடம் கேட்டறிந்தாா்.

ஆய்வின் போது விழுப்புரம் ஏ.எஸ்.பி. ரவீந்திரகுமாா் குப்தா, கூடுதல் எஸ்.பி. திருமால், விக்கிரவாண்டி டிஎஸ்பி நந்தகுமாா், காவல் ஆய்வாளா் பாண்டியன், தவெக மாவட்டப் பொறுப்பாளா் பரணி பாலாஜி, மாவட்டத் தலைவா் குஷி மோகன், துணைத் தலைவா் வடிவேல், மாவட்ட இளைஞரணித் தலைவா் விஜய் ஜி.பி.சுரேஷ், வழக்குரைஞா் அரவிந்த் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.