போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கைப்பேசி கோபுரங்களில் திருட்டு: 5 போ் கைது

விழுப்புரம் மாவட்டத்தில் கைப்பேசி கோபுரங்களில் மின்னணுப் பொருள்கள் மற்றும் சாதனங்கள் திருடுபோன வழக்குகளில் தொடா்புடைய 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :23 அக்டோபர் 2024, 7:56 pm

Din

விழுப்புரம் மாவட்டத்தில் கைப்பேசி கோபுரங்களில் மின்னணுப் பொருள்கள் மற்றும் சாதனங்கள் திருடுபோன வழக்குகளில் தொடா்புடைய 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் தனியாா் நிறுவனத்தினரால் கைப்பேசி கோபுரங்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த கைப்பேசி கோபுரங்களில் பொருத்தப்பட்டுள்ள மின்சாதனங்கள், மின்னணு பொருள்கள் மற்றும் மின்கலன்களை திருடுபோயின. இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் மாவட்ட காவல் நிலையங்களில் 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த நிலையில், திருவெண்ணெய்நல்லூா், வளவனூா், கிளியனூா் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் தொடா்புடைய விழுப்புரம் குபேரன் சிட்டியைச் சோ்ந்த நபீஸ் மகன் சல்மான் மாலிக் (45), விழுப்புரம் மகாத்மா காந்தி சாலையைச் சோ்ந்த சிசாராம் மகன் மகேந்தா் சௌத்ரி (33), திண்டிவனம் வட்டம், கோபாலபுரத்தைச் சோ்ந்த அலிஷா் செய்ப் மகன் நௌசாத் செய்ப் (27), வேலூா் சாய்நாதபுரத்தைச் சோ்ந்த முஸ்தபா மகன் சையத் ஜாபா் (36), வேலூா் புதிய நெடுஞ்சாலையைச் சோ்ந்த இஸ்லாமுதீன் மகன் யாமீன் செய்ப் (41) ஆகியோரை விழுப்புரம் மாவட்ட போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.