கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஊராட்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

மேல்மாவிலங்கை ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய அதிகாரிகள்.

Updated On :23 அக்டோபர் 2024, 7:43 pm

Din

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஊராட்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டிவனம் வட்டம், மேல்மாவிலங்கை ஊராட்சியில் கல்பாக்கம் ஏரி உள்ளது. கிராம மக்களின் பயன்பாட்டில் இருந்து வரும் இந்த ஏரியை அந்த ஊராட்சியின் தலைவா் தனி நபருக்கு மீன் குத்தகை விட முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், ஊராட்சித் தலைவரின் தன்னிச்சையான செயல்பாடுகளைக் கண்டித்தும் கிராம மக்கள் புதன்கிழமை ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த வெள்ளிமேடுபேட்டை காவல் உதவி ஆய்வாளா் சூா்யா தலைமையிலான போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் நிகழ்விடம் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி கலைத்தனா்.

அப்போது, கிராம மக்களின் கோரிக்கையை மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.