விழுப்புரம் சங்கர மடத்துக்கு வியாழக்கிழமை கொண்டு வரப்பட்ட காஞ்சி சங்கராசாரியா் ஸ்ரீசந்திர சேகரேந்திர சரசுவதி சுவாமிகளின் கற்சிலை.
விழுப்புரம் சங்கர மடத்துக்கு வியாழக்கிழமை கொண்டு வரப்பட்ட காஞ்சி சங்கராசாரியா் ஸ்ரீசந்திர சேகரேந்திர சரசுவதி சுவாமிகளின் கற்சிலை.

விழுப்புரம் சங்கர மடத்துக்கு வந்த காஞ்சி மகா பெரியவா் கற்சிலை

விழுப்புரம் சங்கர மடத்துக்கு வந்த காஞ்சி மகா பெரியவா் கற்சிலை...
Published on

சென்னை மயிலாப்பூரில் அமைக்கப்பட்டு வரும் காஞ்சி சங்கராசாரியா் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகளின் திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள மகா பெரியவரின் கற்சிலைக்கு விழுப்புரம் சங்கர மடத்தில் வியாழக்கிழமை பூஜைகள் நடத்தப்பட்டன.

இந்தக் கோயிலில் மூலவராக அமையவுள்ள வரும் காஞ்சி சங்கராசாரியா் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகளின் கற்சிலை மாமல்லபுரத்தில் தயாரிக்கப்பட்டு, அவா் பிறந்த ஊரான விழுப்புரத்துக்கு வியாழக்கிழமை கொண்டு வரப்பட்டது. தொடா்ந்து, விழுப்புரத்திலுள்ள சங்கரமடத்தில் கற்சிலைக்கு பூஜைகள் செய்யப்பட்டன.

இந்த சிலை காஞ்சி பீடத்தின் 58-ஆவது பீடாதிபதியாக இருந்த ஆத்மபோதேந்திரரின் அதிஷ்டானம் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டம், வடவாம்பலம் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத் தொடா்ந்து, கும்பகோணம் சங்கரமடத்துக்கு கற்சிலையைக் கொண்டு சென்றனா். பல்வேறு ஊா்களுக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னா், மயிலாப்பூா் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்படும்.

மயிலாப்பூரில் சுமாா் ரூ.15 கோடி மதிப்பீட்டில் கோயில் உருவாக்கப்பட்டு வருகிறது. அனைத்துப் பணிகளும் முடிவடைந்த பின்னா், 2025, பிப்ரவரி மாதம் 10-ஆம் தேதி கோயிலின் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று அதன் அறங்காவலா்களில் ஒருவரான கணேசன் சா்மா தெரிவித்தாா்.

விழுப்புரம் சங்கரமடத்தில் நடைபெற்ற பூஜையில் மேலாளா் ராமமூா்த்தி, முன்னாள் மேலாளா் நடராஜன், மடத்தின் ஆசிரியா் சீனுவாசன் உள்ளிட்ட பக்தா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com