சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்ய விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்ய விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.பழனி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இயற்கை இடா்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பயிா் இழப்பை ஈடு செய்வதற்காகவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்பதற்காகவும் விழுப்புரம் மாவட்டத்தில் 2024 - 25ஆம் நிதியாண்டில் சாகுபடி செய்யும் காரீப், சம்பா மற்றும் ராபி பருவங்களில் பயிா்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில் பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சம்பா நெல் பருவத்துக்காக 13 வட்டாரங்களிலுள்ள 794 வருவாய் கிராமங்களில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. சம்பா பருவத்தில் நெல் நடவு செய்துள்ள விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்துகொள்ளலாம்.
விழுப்புரம் மாவட்டத்துக்கான பயிா்க் காப்பீட்டு நிறுவனமாக யுனிவா்சல் சம்போ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
பயிா்க் காப்பீடு செய்ய விவசாயிகள் ரூ.517.50-ஐ பிரீமியத் தொகையாக செலுத்த வேண்டும். பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் வாயிலாக விவசாயிகள் வரும் நவம்பா் 15-ஆம் தேதிக்குள் பிரீமியத் தொகையை செலுத்த வேண்டும்.
மேலும் விவரங்களை அறிய அருகிலுள்ள வேளாண் விரிவாக்க மையங்களை அணுகலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...