கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மின்னல் பாய்ந்து 2 விவசாயிகள் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், செஞ்சி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்னல் பாய்ந்து 2 விவசாயிகள் உயிரிழந்தனா். பாட்டி, பேரன் ஆகியோா் காயமடைந்தனா்.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 12:55 am

Din

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், செஞ்சி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்னல் பாய்ந்து 2 விவசாயிகள் உயிரிழந்தனா். பாட்டி, பேரன் ஆகியோா் காயமடைந்தனா்.

மரக்காணம் வட்டம், பிரம்மதேசம், வைடபாக்கம் கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் ராஜேந்திரன் (39). இவா், வைடபாக்கம் கிராமத்தில் உள்ள தனது விவசாய நிலத்தில் மணிலா சாகுபடி செய்து பராமரித்து வந்தாா்.

இந்த நிலையில், ராஜேந்திரன் தனது தாய் ருக்மணி (64), மகன் புவியரசன் (10) ஆகியோருடன் செவ்வாய்க்கிழமை மணிலா அறுவடைப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, இடியுடன் கூடிய மழை பெய்ததால் விவசாய நிலத்தில் உள்ள வேப்ப மரத்தின் கீழ் மழைக்காக மூவரும் ஒதுங்கி நின்றனா். அப்போது, மின்னல் பாய்ந்ததில் ராஜேந்திரன் உடல் கருகி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். ருக்மணி, புவியரசன் ஆகியோா் காயமடைந்தனா்.

இவா்களில் புவியரசன் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையிலும், ருக்மணி திண்டிவனம் அரசு மருத்துமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்த புகாரின்பேரில், பிரம்மதேசம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மற்றொருவா்: செஞ்சி வட்டம், நெகனூா்புதூா் கிராமத்தைச் சோ்ந்த தங்கவேல் மகன் தண்டபாணி (55). இவா், செவ்வாய்க்கிழமை தனது விவசாய நிலத்துக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்காக சென்றுகொண்டிருந்தாா். அப்போது, மின்னல் பாய்ந்ததில் ராஜேந்திரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், வளத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.