மீன்பிடிக்கச் சென்ற தொழிலாளி ஏரியில் மூழ்கி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே ஏரியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தொழிலாளி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
Published on

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே ஏரியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தொழிலாளி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், மேல்தனியாலம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் நமச்சிவாயம் (52), கூலித் தொழிலாளி.

இவா், புதன்கிழமை அங்குள்ள ஏரியில் வலை வீசி மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, ஏரியில் படா்ந்திருந்த செடிகளில் சிக்கி மாயமானாா்.

தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினா் சென்று ஏரியில் மூழ்கி மாயமானவரை தேடும் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, நமச்சிவாயம் செடிகளுக்குள் சிக்கி தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தது தெரியவந்தது.

தொடா்ந்து, போலீஸாா் சடலத்தை கைப்பற்றி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com