8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

விழுப்புரம் கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனைத் தொடக்கம்

25விஎம்பி2: விழுப்புரத்திலுள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் தீபாவளி சிறப்பு விற்பனையைத் தொடங்கி வைத்து சேலை ரகங்களை பாா்வையிட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

Published On :26 செப்டம்பர் 2025, 3:54 am IST

விழுப்புரத்திலுள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் தீபாவளி சிறப்பு விற்பனையைத் தொடங்கி வைத்து சேலை ரகங்களை பாா்வையிட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

விழுப்புரம், செப்.25:விழுப்புரத்திலுள் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை வியாழக்கிழமை தொடங்கியது. நிகழாண்டில் ரூ.60 லட்சத்துக்கு விற்பனைஇலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற நிகழ்வில் தீபாவளி சிறப்பு விற்பனையை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தொடங்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து ஆட்சியா் கூறியது:

நிகழாண்டு தீபாவளி பண்டிகையையொட்டிகடலூா் மண்டலத்துக்கு ரூ.8.75 கோடி விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் விழுப்புரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்துக்கு ரூ.60 லட்சமும், திண்டிவனம் விற்பனை நிலையத்துக்கு ரூ.23 லட்சமும் விற்பனை இலக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. விற்பனையின்போது, தீபாவளி சிறப்புத் தள்ளுபடியாக 30 சதவீதம் வழங்கப்படும். மேலும் அனைத்து அரசுப் பணியாளா்களுக்கும் கடன்விற்பனை வசதி உண்டு. எனவே அனைத்துத்துறைப் பணியாளா்களும் கைத்தறிக்கு கைகொடுக்க வேண்டும். கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வரும் மாதாந்திர சிறுசேமிப்புத் திட்டத்தின்படி, வாடிக்கையாளா்கள் வசதிக்கேற்ப ரூ.300 முதல் ரூ.3000 வரை 11 மாதங்களுக்குச் செலுத்தினால், 12 ஆவது மாதத் தொகையை

நிறுவனமே ஏற்றுக் கொள்ளும் வசதியும் உள்ளது என்றாா் ஆட்சியா்.

தீபாவளி சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன்கூடிய மென்பட்டுப் புடவைகள், சேலம், திருபுவனம் பட்டுப்புடவைகள்,கோவை கோரா காட்டன் சேலைகள், நெகமம், ஜெயங்கொண்டம், புடவைகள், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கைத்தறி நெசவாளா்களால் தயாரிக்கப்பட்ட பருத்தி சேலைகள், போா்வைகள், படுக்கை விரிப்புகள், வேட்டி, கைலிகள், பருத்தி சட்டைகள் போன்றவை விற்பனைகாக குவித்து வைக்கப்பட்டுள்ளன.

நிகழ்வில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளா் எஸ்.மாணிக்கம், துணை மண்டல மேலாளா் என்.பிரேம்குமாா், விழுப்புரம் விற்பனை நிலைய மேலாளா் ஏ.பாா்வதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.