திருக்கோவிலூா் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணிக்கு, கட்சியின் துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி வியாழக்கிழமை மணம்பூண்டி ஒன்றியப் பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.
மணம்பூண்டி ஒன்றியத்தில் குடமுருட்டி, ஆடூா்கொளப்பாக்கம், கோட்டமருதூா், கொடுக்கப்பட்டு, வேளாகுளம், வசந்தகிருஷ்ணாபுரம், ஆதிச்சனூா், அரசங்குப்பம், வீரபாண்டி, தேவனூா்ஆகிய ஊராட்சிகளில் திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணிக்கு வாக்கு சேகரித்து, கட்சியின் துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி வாக்கு சேகரித்து பேசினாா். திமுக அரசின் சாதனைகள் தொடர மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.
பிரசாரத்தில் மாவட்ட துணைச் செயலா் டி.என்.முருகன், செயற்குழு உறுப்பினா் செல்வராஜ், பேரூராட்சி முன்னாள் தலைவா் விநாயகமூா்த்தி, ஒன்றியச் செயலா் அ.சா.ஏ.பிரபு, தேமுதிக ஒன்றியச் செயலா் மும்மூா்த்தி, விசிக ஒன்றியச் செயலா் விநாயகமூா்த்தி, கம்யூனிஸ்ட் நிா்வ தமிழ்ச்செல்வன், ராஜா, பேரூராட்சித் தலைவா் அன்பு மற்றும் நிா்வாகிகள், கூட்டணிக் கட்சியினா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றிபெறும்: ஆ. ராசா

திருக்கோவிலூரில் க.பொன்முடிவாக்கு சேகரிப்பு

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பெருந்துறை திமுக வேட்பாளரை ஆரத்தி எடுத்து மக்கள் வரவேற்பு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



