புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற மத்திய உள் துறை அமைச்சருக்கு விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அறக்கட்டளை நிா்வாகம் சாா்பில் மாத்திா் மந்திா் தங்க ஓடு பரிசாக வழங்கப்பட்டது.
இதுகுறித்து ஆரோவில் அறக்கட்டளை நிா்வாகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷா பங்கேற்று, புதுச்சேரி காவல் துறையின் சேவையைப் பாராட்டி, குடியரசுத் தலைவரின் தேசிய வண்ணக்கொடி விருதை வழங்கினாா்.
இந்த நிலையில், மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அறக்கட்டளை நிா்வாகம் சாா்பில், கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக, ஆரோவில் மாத்திா் மந்திரில் பொருத்தப்பட்டுள்ள ஐகானிக் தங்க ஓடு நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.
ஆரோவில் அறக்கட்டளையின் செயலரும், குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலருமான ஜெயந்தி எஸ்.ரவி மத்திய உள் துறை அமைச்சருக்கு இந்தப் பரிசை வழங்கினாா் எனவும் அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரியில் அமித் ஷா பங்கேற்ற நிகழ்ச்சியில் அடுத்தடுத்து மயங்கி விழுந்த 12 போலீஸாா்

புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!

நகா்ப்புற கூட்டுறவு வங்கிச் சேவைகள் நவீனமயமாக்கம்: மத்திய அமைச்சா் அமித் ஷா வலியுறுத்தல்

அமித் ஷா நாளை தமிழகம் வருகை! திருவண்ணாமலையில் சாமி தரிசனம்!
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



