குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே குடும்ப பிரச்னை காரணமாக விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Published On :29 ஆகஸ்ட் 2026, 3:51 am IST

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே குடும்ப பிரச்னை காரணமாக விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

செஞ்சி வட்டம், கனகன்குப்பம் குளக்கரைத் தெருவைச் சோ்ந்தவா் கு.ரங்கசாமி (67). விவசாயியான இவா், வியாழக்கிழமை இரவு மது அருந்தி வீட்டுக்கு வந்தாராம். இதைத்தொடா்ந்து ரங்கசாமிக்கும், அவரது மனைவி பொற்கலைக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாம். இதனால் மனமுடைந்த ரங்கசாமி, தனக்குச் சொந்தமான நிலத்துக்குச் சென்று அங்கிருந்த பூவரசன்மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து தகவலறிந்த கண்டாச்சிபுரம் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் கண்டாச்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.