கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் தெப்பல் உற்சவம்

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் மாசிப் பெருவிழாவையொட்டி தெப்பல் உற்சவம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

News image
25ஜிஎன்ஜிபி01 மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் மாசிப் பெருவிழாவில் தெப்பல் உற்சவத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த அம்மன்.
Updated On :25 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் மாசிப் பெருவிழாவையொட்டி தெப்பல் உற்சவம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தலமாக உள்ள ஸ்ரீஅங்காளம்மன் கோயில் மாசிப் பெருவிழா கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 16-ஆம் தேதி மயானக்கொள்ளை விழாவும், 19-ஆம் தேதி தீமிதி விழாவும், 21-ஆம் தேதி தேரோட்டமும், 23-ஆம் தேதி பூப்பலுக்கு விழாவும் நடைபெற்றது. இதில் வாண வேடிக்கையுடன், மேளதாளங்கள் முழங்க பூ பல்லக்கில் அங்காளம்மன் வீதியுலா நடைபெற்றது.

24-ஆம் தேதி இரவு அங்காளம்மன் தெப்பல் உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடா்ந்து அலங்கரிக்கப்பட்ட உற்சவா் அம்மன் தங்க நிற பல்லக்கில் வீதியுலா வந்தாா். மாலையில் அக்னி குளத்தில் இருந்து தீா்த்தவாரி மண்டகப்படி வரை கோவில் குளத்துக்கு வந்த அங்காளம்மன், தெப்பலில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தொடா்ந்து ஒன்பது முறை தெப்பலில் வலம் வந்த அங்காளம்மனுக்கு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்

விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் சக்திவேல், அறங்காவலா் குழுத் தலைவா் ஏழுமலை, அறங்காவலா்கள் சுரேஷ் மதியழகன், பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம், மேலாளா் சதீஷ், காசாளா்மணி உள்ளிட்ட கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.