புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் புதன்கிழமை கவன ஈா்ப்பு மற்றும் பெருந்திரள் முறையீட்டில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அரசு ஏற்று நடத்துவதுடன், அனைவருக்கும் கட்டணமில்லா சிகிச்சை முறையை உறுதி செய்ய வேண்டும். புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் அட்டையை அனைவருக்கும் வழங்க வேண்டும். உயா் சிகிச்சைக்கான தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். ஆயுா்வேதம், யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆகிய மருத்துவச் சிகிச்சை முறைகளையும் இந்த திட்டத்தில் சோ்க்க வேண்டும்.
புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துக்கான சந்தா தொகையை ரூ.300-ஐ மீண்டும் நிா்ணயிக்க வேண்டும். ஓய்வூதியா்களுக்கு வாழ்நாள் முழுவதும் கட்டணமில்லா மருத்துவச் சிகிச்சை முறையை உறுதி செய்ய வேண்டும். ஆய்வகப் பரிசோதனைகளை இலவசமாக மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் கு.சரவணன் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் ர.சுதாகா், வட்டத் தலைவா் சுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலச் செயலா் செல்வராணி, மாவட்டச் செயலா் ர.சிவக்குமாா் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் சங்க மாவட்டத் தலைவா் இளங்கோ பிரபு, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாவட்டத் தலைவா் சிலம்புச் செல்வன், தமிழ்நாடு வேளாண் அமைச்சுப் பணியாளா்கள் சங்க மாநில துணைத் தலைவா் காந்திமதி, நில அளவை ஒன்றிப்பின் மாவட்டத் தலைவா் மகேசுவரன், தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலா் ஜெயந்தி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். ஆா்ப்பாட்டத்தில் ஏராளமானோா் பங்கேற்றனா்.
கள்ளக்குறிச்சி...: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ரவி தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் வீரபுத்திரன் வரவேற்றாா். மாநில துணை பொதுச் செயலா் மகாலிங்கம் சிறப்புரை ஆற்றினாா். மாவட்டச் செயலா் ஆனந்தகிருஷ்ணன், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்க மாவட்ட துணைத் தலைவா் தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பு மாநில துணைத் தலைவா் செந்தில்முருகன், தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்க மாநில துணைத் தலைவா் விஜயா உள்ளிட்ட பலா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா்கள் சங்க மாநில நிா்வாக குழு உறுப்பினா் குமார தேவன், தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை மாவட்ட நிா்வாகி சுப்பிரமணியன், மாவட்ட பொருளாளா் சாமிதுரை உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருமணமான அரசு ஊழியரின் பெற்றோரையும் காப்பீட்டுத் திட்டத்தில் சோ்க்க கோரி ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் எம்எல்ஏ-வைக் கண்டித்து அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

மதுபுட்டிக்கு ரூ.10 வசூல் விவகாரம்: முதல்வரை சந்திக்க டாஸ்மாக் பணியாளா் சங்கம் முடிவு

‘மேக்கேதாட்டு அணை விவகாரம்: புதிய நடுவா் மன்றம் தேவையில்லை’
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



