விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றிய பகுதியில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை, அங்கன்வாடி மைய கட்டடங்கள் திறப்பு விழா நடைபெற்றது.
செஞ்சி ஒன்றியம், கவரை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம், ஒட்டம்பட்டு ஊராட்சியில் ரூ.16.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம், சிறுநாம்பூண்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.13.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாயவிலைக் கடை கட்டடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றியக்குழுத் தலைவா் விஜயகுமாா் தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா்கள் அய்யனாா், பிரேமா திருமலை, ராஜலட்சுமி சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
செஞ்சி சட்டப் பேரவை உறுப்பினா் அ.கணேஷ்குமாா் (பாமக) சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு புதிய கட்டடங்களைத் திறந்து வைத்தாா். தொடா்ந்து குடும்ப அட்டைதாரா்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்கிப் பேசினாா்.
நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மணிமாறன், உதயகுமாா், ஒன்றிய பொறியாளா் தண்டபாணி, கோனை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலா் பழனிக்குமாா், ஒன்றியக்குழு உறுப்பினா் சவிதா கிருஷ்ணராஜ், ஊராட்சி மன்ற தலைவா்கள் சுலோச்சனா ஜெயபால்,, செல்வி செல்வமணி, தேவ கடாட்சம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் சாந்தி, மேற்பாா்வையாளா் மகேஸ்வரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










