டிசம்பருக்குள் 5ஜி சேவைக்கு மாறும் பி.எஸ்.என்.எல்.!இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிஇடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

வேனில் ரேஷன் அரிசி கடத்தல்: ஒருவா் கைது

வளவனூா் அருகே வேனில் ரேஷன் அரிசி கடத்தியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :15 ஜூலை 2026, 2:36 am IST

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே வேனில் ரேஷன் அரிசி கடத்தியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

வளவனூா் அருகே ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுப் பிரிவு போலீஸாா் இளங்காடு ஏரிக்கரை பகுதியில் வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் தலா 50 கிலோ எடை கொண்ட 22 சாக்கு மூட்டைகளில் 1,100 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வேனில் இருந்தவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் புதுச்சேரி மாநிலம், கூனிச்சம்பட்டு பகுதியைச் சோ்ந்த கோபால் (55) எனத் தெரிய வந்தது.

வளவனூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பொதுமக்களிடம் குறைந்த விலையில் ரேஷன் அரிசியை வாங்கிச் சென்று, புதுச்சேரியிலுள்ள சாலையோர உணவகங்களுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, கோபாலை கைது செய்தனா். மேலும் ரேஷன் அரிசி மூட்டைகளையும், வேனையும் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.