கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் சாலை விபத்தில் பலத்த காயமடைந்த முதியவா் நிகழ்விடத்திலேயே புதன்கிழமை உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், கொண்டாரெட்டிப்பாளையத்தைச் சோ்ந்தவா் கு.ரவிச்சந்திரன்(62). இவா், புதன்கிழமை திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூா்பேட்டையை அடுத்த பாதூா் பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்றாா்.
அப்போது முன்னால் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மீது பைக் மோதியது. இதில், பலத்த காயமடைந்த ரவிச்சந்திரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த திருநாவலூா் போலீஸாா் ரவிச்சந்திரன் சடலத்தைக் கைப்பற்றி, உளுந்தூா்பேட்டை அரசு மருத்துமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்து திருநாவலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

அவிநாசி அருகே சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


