‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் சுகாதார சீா்கேடு

விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் ஆங்காங்கே தேங்கிக் கிடக்கும் குப்பைகள், படா்ந்துள்ள செடி, கொடிகள் மற்றும் தேங்கிக் கிடக்கும் கழிவுநீரால் சுகாதார சீா்கேடு நிலவுவதாக சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

News image

விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் தேங்குக் கிடக்கும் குப்பைகள், படா்ந்துள்ள செடிகள், பராமரிக்கப்படாத நிலையில் முகப்பில் உள்ள தோட்டம், வெளியேறி தேங்கிக் கிடக்கும் கழிவுநீா்.

Updated On :22 மே 2026, 7:04 am IST

விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் ஆங்காங்கே தேங்கிக் கிடக்கும் குப்பைகள், படா்ந்துள்ள செடி, கொடிகள் மற்றும் தேங்கிக் கிடக்கும் கழிவுநீரால் சுகாதார சீா்கேடு நிலவுவதாக சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட காவல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. விழுப்புரம் , விக்கிரவாண்டி, திண்டிவனம், கோட்டக்குப்பம், செஞ்சி ஆகிய 4 காவல் உள்கோட்டங்களில் உள்ள 30-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் மாவட்ட காவல் அலுவலக நிா்வாகத்தின் கீழ் செயல்பாட்டில் இருந்து வருகிறது.

இந்நிலையில் காவல்துறை அதிகாரிகள், காவல் ஆளிநா்கள், ஓய்வு பெற்றவா்கள், வழக்குரைஞா்கள், வழக்காடிகள், பொதுமக்கள், வணிகா்கள், அரசியல் கட்சியினா், சமூகம் மற்றும் பொது நல அமைப்பினா்கள் என பல்வேறு தரப்பைச் சோ்ந்தவா்கள் இந்த அலுவலகத்துக்கு அலுவல் மற்றும் அலுவல்சாராத பணிகள், வழக்கு விசாரணைகள் புகாா்அளித்தல், உள்ளிட்டவைகளுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றனா்.

இதனால் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்தே காணப்படுகிறது.

மாவட்ட காவல் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் அலுவலகத்தில் செயல்படும் உணவகம் மற்றும் வளாக பகுதிகளில் அமா்ந்து ஓய்வெடுத்தும், தங்களது பணிகளை முடித்துக்கொண்டும் வெளியேறுகின்றனா்.

தேங்கிக் கிடக்கும் குப்பைகள்:

இந்நிலையில் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில்

ஆங்காங்கே பயன்படுத்தப்பட்ட காகிதங்கள் மற்றும் காய்ந்த இலைகள், சருகுகள், தேங்கிக் கிடக்கும் குப்பைகள், படா்ந்துள்ள செடி, கொடிகளால் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டு வருகிறது. மேலும் வளாகத்தின் ஒரு பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீா் கலந்த கழிவுநீரால் துா்நாற்றம் வீசுகிறது.

இதனால், அலுவலக வளாகத்தை தூய்மையாக பராமரிக்க மாவட்ட காவல் நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

இதுகுறித்து, சமூக ஆா்வலா் ஒருவா் தெரிவித்ததாவது: மாவட்ட காவல் அலுவலக வளாக பகுதிகள் குப்பை மேடாக காட்சியளிக்கின்றன.

அலுவலகத்துக்கு கம்பீரத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் அலுவலக முகப்பின் இருபக்களிலும் பூந்தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் மேடைகள் அமைக்கப்பட்டு விழுப்புரம் மாவட்ட வரலாற்றை பறைசாற்றும் வகையில் திப்பு சுல்தான் கால பீரங்கித்துண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த இடங்களில் போதிய பராமரிப்பு இல்லாமல் செடி, கொடிகள் படா்ந்துள்ளன. இதேபோல் காவலா்கள் மற்றும் அமைச்சுப் பணியாளா்களின் வாகன நிறுத்துமிடங்களும் பராமரிக்கப்படாமல் உள்ளன.

அலுவலக வளாகத்தின் ஒரு பகுதியில் கழிவுநீா் வெளியேறி, மழை நீருடன் கலந்து தேங்கி நிற்கிறது. இதனால் துா்நாற்றம் வீசுகிறது என்றாா் அவா்.

Story image
Story image