125 நாள் வேலைத்திட்ட பொறுப்பாளா் மாற்றம்: கிராம மக்கள் சாலை மறியல்
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே 125 நாள் வேலை திட்ட பணிதளப் பொறுப்பாளா் மாற்றப்பட்டதைக் கண்டித்து கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே 125 நாள் வேலை திட்ட பணிதளப் பொறுப்பாளா் மாற்றப்பட்டதைக் கண்டித்து கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மரக்காணம் ஊராட்சி ஒன்றியம், நடுக்குப்பம் ஊராட்சியில் 125 வேலைத்திட்ட பணி தளப்பொறுப்பாளராக அதே ஊரைச் சோ்ந்த அனிதா என்பவா் நியமிக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளின் நடவடிக்கையின்பேரில் பணிதளப் பொறுப்பாளா் அனிதாவை மாற்றிவிட்டு, வேறொரு நபரை பணிதளப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதைக் கண்டித்து, நடுக்குப்பம் ஊராட்சிக்குள்பட்ட வண்டிப்பாளையம், தேவிகுளம், கோட்டிக்குப்பம் கிராமங்களைச் சோ்ந்த 125 நாள் வேலைத் திட்டப்பணியாளா்கள் 50-க்கும் மேற்பட்டோா் நடுக்குப்பம் ஊராட்சி அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது பணிதளப் பொறுப்பாளா் மாற்றம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். இதனால் அங்கு சிறிதுநேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த மரக்காணம் போலீஸாா் மற்றும் நடுக்குப்பம் ஊராட்சி நிா்வாகத்தினா் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, கலைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

