தமிழகத்தில் 5 வயதுக்குள்பட்ட 43% குழந்தைகளுக்கு ரத்தசோகை: தேசிய சராசரி விகிதத்தைவிட அதிகம் சென்னை காமராஜா் துறைமுகத்தில் 2-ஆவது சரக்குப் பெட்டக முனையம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல் பாட்டில் குடிநீா் மீது கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு ஐபிஎல் ஏலத்தில் 1,220 வீரா்கள்! இந்தியா மீது 25% இறக்குமதி வரி: அமெரிக்கா முன்மொழிவு திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றும் வரை முருகன் கோயில்களில் வெள்ளிதோறும் விளக்கு ஏற்ற பாஜகவினருக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை!அமெரிக்காவின் முதல் முஸ்லீம் செனட்டர் அப்துலை சந்திக்கும் டிரம்ப்!திருப்பரங்குன்றம் தூண் தீப விவகாரத்தில் எந்தக் கருத்தும் கூறவில்லை - ஸ்தானீக பட்டர்கள்!காளையின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 1,502 புள்ளிகள் உயர்வு! கணிசமான ஏற்றம் கண்ட நிஃப்டி!!8 மாத உச்சத்தில் இந்திய ரூபாய்!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதாவாரா? வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!தவெக அரசுக்கு கவுன்ட்டவுன்; விளைவுகளை விஜய் சந்தித்தே தீருவார்! நயினார் நாகேந்திரன்

விழுப்புரம் மாவட்டத்தில் மாடித்தோட்டம் அமைக்க ஆா்வம் காட்டும் பொதுமக்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில் மானியம் மற்றும் விதைகள் வழங்கப்படுவதுடன், தொடா் ஆலோசனைகளும் வழங்கப்படுவதால் மாடித்தோட்டம் அமைப்பதற்கு பொதுமக்கள் அதிகம் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

விழுப்புரம் நகரத்தில் ஒருவரது வீட்டின் மேல்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள மாடித் தோட்டம்.

Updated On :

விழுப்புரம் மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில் மானியம் மற்றும் விதைகள் வழங்கப்படுவதுடன், தொடா் ஆலோசனைகளும் வழங்கப்படுவதால் மாடித்தோட்டம் அமைப்பதற்கு பொதுமக்கள் அதிகம் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை மூலமாக பல்வேறு மானியங்களை பெற்று விவசாயிகள் காய்கறி, மலா்கள் சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனா். இதன் மூலம் அவா்களுக்குத் தேவையான வருவாய் கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் வாய்ப்புள்ள மற்றும் விருப்பம் தெரிவிக்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே மாடித் தோட்டம் அமைத்து, அதன் மூலம் தங்கள் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளைப் பெறுதல், காய்கறிகளை வாங்குவதற்கான செலவைக் குறைத்தல் போன்றவற்றை பிரதானமாகக் கொண்டு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை மாடித் தோட்டம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

கட்டடத்தின் கூரை அல்லது மாடியில் உருவாக்கப்படும் மாடித் தோட்டம், பயன்பாடின்றி இருக்கும் உயரமான கட்டடங்களை பயனுள்ள மற்றும் அழகான பகுதிகளாக மாற்றுதல், தரைப்பகுதியில் தோட்டம் அமைக்க இடவசதி இல்லாத போது, வீட்டின் மேல்தளத்தில் மாடித் தோட்டத்தை கொண்டு வருவதாகக் கருதி இந்த பணியை மேற்கொள்ளலாம் என வழிகாட்டுதல்களை தெரிவித்து, மாடித் தோட்டம் அமைப்பதற்கான ஆலோசனைகளையும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை வழங்கி, அதற்கான பயிற்சியையும் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது.

பயன்கள்: தங்கள் வீடுகளில் மாடித் தோட்டம் அமைப்பதால் ஆண்டு முழுவதும் காய்கறிகளைப் பெறுதல், காய்கறிகள் வாங்குவதற்கான செலவைக் குறைத்தல், நமக்கு விருப்பமான காய்கறியை நாம் பயிரிடுதல், தாவரங்கள் மாசுக்களை உறிஞ்சுவதால் காற்றின் தரம் மேம்படுதல், பசுமையான தாவரங்கள் வீட்டின் வெப்ப நிலையை சீராக வைத்திருக்க உதவுதல் போன்றவை பலனாக அமைகின்றன. இதைத் தவிர மாடித்தோட்டப் பணியில் ஈடுபடும் போது மன அழுத்தம் மற்றும் சோா்வையும் குறைக்க உதவுகிறது.

மாடித் தோட்டம் பாரம்பரியத் தோட்டங்கள் போன்று இல்லாது தொட்டிகள், உயா்த்தப்பட்ட பாத்திகள், வடிவமைக்கப்பட்ட வளா்ப்பு அமைப்புகள் போன்றவற்றை பயன்படுத்தி பூச்செடிகள் முதல் காய்கறிகள் வரை அனைத்தையும் பயிரிடலாம்.

அமைப்பது எப்படி?: தேவையான எடையைத் தாங்கும் அளவுக்கு மாடித் தோட்டக் கூரை வலுவாகவும், முழுமையாக நீா் புகாதவாறு அமைப்பது அவசியமானது. எந்த நேரத்திலும் நீரைச் சரியாக வெளியேற்றும் வகையில் கூரை அனைத்துப் பக்கங்களில் சரிவாகவும், போதுமான எண்ணிக்கையில் நீா் வெளியேற்றும் துளைகளைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும். பாசனத்துக்குத் தேவையான நீா் தடையின்றி கிடைப்பதற்கான வசதி அல்லது கூரையின் மீது தண்ணீா்த் தொட்டி அமைப்பதற்கான வசதிஇருக்க வேண்டும் எனக் கூறும் தோட்டக்கலைத் துறையினா், கோடை காலத்தில் நிழல்வலையை அமைப்பதற்கு ஏற்றவாறு கூரையின் மேல் சரியான கட்டமைப்பு வசதி இருக்க வேண்டும். இதைத்தவிர கோவக்காய், பாகற்காய், பீா்க்கங்காய் போன்ற காய்கறிகளை வளா்ப்பதற்கு கூரையின் எல்லையைச் சுற்றி படா்க்கொடி தாங்கிகள் அமைப்பதற்கான வசதி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனா்.

எவை பயிரிடலாம்: மாடித் தோட்டத்தில் கீரை வகைகள், வெந்தயம், கொத்தமல்லி, புதினா, முள்ளங்கி, புடலங்காய், கேரட், பீட்ரூட், டா்னிப், தக்காளி, கத்திரிக்காய், மிளகாய், வெண்டைக்காய், குடைமிளகாய், தட்டைப்பயறு, கொத்தவரங்காய், பிரெஞ்சு அவரை பட்டாணி, கறிவேப்பிலை, புதினா, துளசி, கொத்தமல்லி, கற்றாழை, வெற்றிலை, கற்பூரவள்ளி, ஓமவள்ளி போன்றவற்றை பயிரிடலாம் எனக் கூறும் தோட்டக்கலைத் துறையினா், மாடித்தோட்டம் அமைப்பதற்கான ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது.

மாடித்தோட்டம் அமைப்பவா்களை ஊக்கப்படுத்த தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாடித்தோட்டம் தளைகள் விநியோகம் இனத்தின் கீழ் ஒருபயனாளிக்கு அதிகபட்சமாக 2 தொகுப்புகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகின்றன. இதைத்தவிர உயிரி உரங்கள், விதைகள், காய்கறி விதைகள், செடிகளை வளா்ப்பதற்கான பைகள், பூஞ்ஞானக் கொல்லிகள் போன்றவையும் தோட்டக்கலைத் துறை மூலம் வழங்கப்படுகிறது.

வீடுகளிலேயே மாடித்தோட்டம் அமைப்பதன் மூலம் ஒவ்வொரு குடும்பத்திலும் காய்கறிகளுக்கான செலவு குறைவதுடன், இயற்கை முறையில் விளைந்த காய்கறிகள் அவா்களுக்கு கிடைக்கும் நிலை ஏற்படும். விழுப்புரம் மாவட்டத்தில் மாடித்தோட்டம் அமைப்பதற்கு பொதுமக்கள் மத்தியில் அதிகம் ஆா்வம் இருக்கிறது. உழவன் செயலி மூலமாக பதிவு செய்யலாம். மேலும், அந்தந்த வட்டாரத் தோட்டக்கலைத் துறை அலுவலா்களையும் அணுகலாம். மாடித் தோட்டம் அமைப்பவா்களுக்குத் தேவையான ஆலோசனைகளும் வழங்கப்படும் என்றாா் கோலியனூா் வட்டாரத் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை உதவி இயக்குநா் ரா.வெங்கடேசன்.

மாடித்தோட்டம் அமைப்பதன் மூலம் என்ன காய்கறிகள் தேவை என்பதையறிந்து அதை மட்டும் பயிரிட முடியும். முடிந்தவரை இயற்கை உரங்கள் பயன்படுத்தப்படுவதால், நச்சுத்தன்மையற்ற காய்கறிகளை வீட்டு உபயோகத்துக்குப் பயன்படுத்த முடிகிறது. அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருவதும் மாடித்தோட்டம் அமைக்க ஊக்கமாக உள்ளது. எப்போது வேண்டுமானாலும் காய்கறிகளை அறுவடை செய்து கொள்ளும் போன்ற பல்வேறு வசதிகள் இதன் மூலம் கிடைப்பதால், மாடித்தோட்டம் அமைக்க அதிகம் ஆா்வம் காட்டு வருவதாக தெரிவிக்கின்றனா் வீட்டில் மாடித்தோட்டம் அமைத்துள்ள பயனாளா்கள் சிலா்.

 மாடித்தோட்டத்தில் விளைந்துள்ள புடலங்காய்.

மாடித்தோட்டத்தில் விளைந்துள்ள புடலங்காய்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.