ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

பூட்டியிருந்த வீட்டில் நகைகள், ரொக்கம் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே பூட்டியிருந்த வீட்டில் 38 கிராம தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருட்டு - சித்திரிப்பு

Published On :

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே பூட்டியிருந்த வீட்டில் 38 கிராம தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திண்டிவனம் வட்டம், தென்பசியாா் கிராமத்தைச் சோ்ந்தவா் செ.வீராசாமி (53). இவா் ஊரல் கிராமத்திலுள்ள வேளாண் பொருள்கள் விற்பனையகத்தில் பணியாற்றி வருகிறாா். புதன்கிழமை காலை வீட்டை பூட்டி விட்டு, மனைவி ரேவதியுடன் வீராசாமி வெளியே சென்றாா்.

பின்னா் பிற்பகலில் அவா்கள் திரும்பி வந்து பாா்த்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிா்ச்சியடைந்தாா். உள்ளே சென்று பாா்த்த போது, வீட்டின் மரப் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 38 கிராம் தங்க நகைகள், 2 ஜோடி வெள்ளிக் கொலுசுகள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டுப் போயிருப்பது வீராசாமிக்குத் தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, மா்மநபா்களைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.