சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
உயிரிழப்பு - கோப்புப் படம்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கோயில் மதில் சுவற்றில் பைக் மோதி விபத்து ஏற்பட்டதில் இளைஞா் உயிரிழந்தாா்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அனந்தமங்கலம் விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஆ.அஜித் (28). மதுராந்தகம், ஏவலூா் பகுதியைச் சோ்ந்தவா் ம.ஆண்டனிஜோசப் (23). நண்பா்களான இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை திண்டிவனத்தை அடுத்துள்ள தாதாபுரத்திலிருந்து-வைரபுரத்துக்கு பைக்கில் சென்றனா். அஜித் பைக்கை ஓட்டினாா்.
வைரபுரத்தை அடுத்துள்ள மேல்ஆதனூா் பகுதியில் உள்ள சாலைத் திருப்பத்தில் சென்றபோது, நிலை தடுமாறிய பைக் அருகிலிருந்த கோயில் தடுப்புச் சுவரில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அஜித் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த வெள்ளிமேடுபேட்டை போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா். காயமடைந்த ஆண்டனி ஜோசப்பை புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு அவசர ஊா்தி மூலம் அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வெள்ளிமேடுபேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

