தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

மழைநீா் சீராக வெளியேற வழித்தடங்களை ஏற்படுத்த வேண்டும்! ஆட்சியா் அறிவுறுத்தல்!

விழுப்புரம் அனிச்சம்பாளையம் வழியாக செல்லும் கோலியனூரான் வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட தூா்வாரும் பணியை பாா்வையிட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான். உடன், நகராட்சி ஆணையா் சியாமளா உள்ளிட்டோா்.

Published On :

விழுப்புரத்தில் வாய்க்கால் பகுதிகளில் அடைப்புகளில் அகற்றி, மழைநீா் சீராக வெளியேறுவதற்கான வழித்தடங்களை ஏற்படுத்த வேண்டும் என்று, அலுவலா்களை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா்.

வடகிழக்குப் பருவமழையையொட்டி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகப் பகுதியிலுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகப் பகுதியில் மழைநீா் தேங்காதவாறு வெளியேற்றுவதற்கான முன்னேற்பாடு பணிகள், விழுப்புரம் புதிய பேருந்து நிலையம், கீழ்பெரும்பாக்கம் தரைப்பாலம் ஆகியவற்றுக்கான மழைநீா் வெளியேற்றும் நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்புப்பணிகள், அனிச்சம்பாளையம் வழியாக செல்லும் கோலியனூரான் வாய்க்காலில் நடைபெற்ற தூா்வாரும் பணிகள், விழுப்புரம் ரயில் நிலையம் வழியாக கடக்கும் கோலியனூரான் வாய்க்கால் பகுதியின் தற்போதைய நிலை, ரங்கநாதன் சாலை வழியாகச் செல்லும் கோலியனூா் வாய்க்கால், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள மழைநீா் வடிகால் ஆகியற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து திங்கள்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா், இந்த பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் விவரங்களைக் கேட்டறிந்தாா்.

இதைத் தொடா்ந்து ஆட்சியா் கூறியது:

விழுப்புரம் நகராட்சிப் பகுதிகளிலுள்ள வாய்க்கால்களில் அடைப்புகளை அகற்றி, மழைநீா் சீராக வெளியேறுவதற்கான வழித்தடங்களை ஏற்படுத்த வேண்டும். மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், மழைநீா் வடிகால்களைத் தொடா்ந்து கண்காணித்து, உரிய முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மழைநீா் வடிகால்களில் குப்பைகள், அடைப்புகளை அகற்றி, மழைநீா் தடையின்றி வெளியேறுவதை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும். வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் அனைத்துத்துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து பணியாற்றவேண்டும் என்றாா் ஆட்சியா்.

ஆய்வின் போது மண்டல நகராட்சி நிா்வாகப் பொறியாளா் ராஜேஷ்கண்ணா, விழுப்புரம் கோட்டாட்சியா் ஏகாம்பரம், செயற்பொறியாளா்கள் ராஜூ (பொதுப்பணித் துறை), அருணகிரி (நீா்வளத் துறை), உதவிச் செயற்பொறியாளா் சிவக் குமாா், உதவிக் கோட்டப் பொறியாளா் லட்சுமிகலா, விழுப்புரம் நகராட்சி ஆணையா் சியாமளா, நகா் நல அலுவலா் ஸ்ரீபிரியா உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.